என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கரூரில் தாய் திட்டியதால் மகள் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் தாய் திட்டியதால் மகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வேலாயுதம்பாளையம்:

  கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது29). இவரது மனைவி ஹேமலதா (வயது25). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு பிரீத்திக் (வயது7), கார்த்திக் (வயது6) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.  இருவரும் படித்து வருகின்றனர்.  

  இந்நிலையில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு பணம் கட்டுவதற்காக ஹேமலதா தனது தாயார் புனிதாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் புனிதா தன்னிடம் பணம் இல்லையென கூறி ஹேமலதாவை கடுமையாகத் திட்டியுள்ளார்.  இதில் மனமுடைந்த ஹேமலதா தனது வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  தீ உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது.  வலி தாங்க முடியாமல் அலறவே  அக்கம்பக்கத்தினர் சென்று உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது.  

  இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதுகுறித்து அவரது கணவர் கோவிந்தராஜ் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். 
  Next Story
  ×