search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

    திண்டுக்கல் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 16 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை கண்டறியும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அழகுபாண்டி ஆகியோர் தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பழனி அருகே உள்ள குபேர பட்டினத்தைச் சேர்ந்த முகமது லத்தீப் (வயது 22) திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது அலி ஜின்னா (24) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தொடர்ச்சியாக செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து முகமது லத்தீப், முகமது அலி ஜின்னா ஆகிய 2 பேரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 16 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×