search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்ற 4 பேர் கைது

    குமரி மாவட்டத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்ற 4 பேரை கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சில பள்ளி, கல்லூரி அருகிலும், பொது இடங்களிலும் தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது களியக்காவிளை மார்க்கெட் ரோடு பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் சோதனை செய்த போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர் கனகராஜ் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் இருந்து 49 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    அருகில் உள்ள இன்னொரு கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற அஷரப் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் 48 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் செட்டிசார்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற மணி (67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் அந்த பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அத்திக்கடை சந்திப்பில் அனுமதியின்றி மதுவிற்ற பெரியசாமி (57) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×