என் மலர்

  செய்திகள்

  கொலை மிரட்டல்
  X
  கொலை மிரட்டல்

  மெஞ்ஞானபுரம் அருகே கூலி தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: 4 பேருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெஞ்ஞானபுரம் அருகே கூலி தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
  திருச்செந்தூர்:

  மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வின் மகன் ரூபன்(வயது 28), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற ஊர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது பழைய கணக்கை ஒப்படையுங்கள் என ரூபன் கூறியுள்ளார். இதனால் இருதரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

  இந்த நிலையில் ரூபன் சம்பவத்தன்று மெஞ்ஞானபுரம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். மாணிக்கபுரம் அருகே வந்தபோது அதே ஊரைச் சேர்ந்த மூக்கன் மகன் ஆனந்து, ஜாண், கண்ணன், அந்தோணி ஆகியோர் சேர்ந்து ரூபனை வழிமறித்து கம்பியால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

  இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×