என் மலர்
செய்திகள்

கைது
மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி- வாலிபர் கைது
கோவையில் மாணவியை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி அந்த பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோருக்கு நோட்புக் வாங்குவதற்காக சென்றார். அப்போது கடையில் வேலைப்பார்க்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முனீர் (35) என்பவர் மாணவியை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story