search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சேலம் மாவட்டத்தில் மழை

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, ஜங்சன், அம்மாப்பேட்டை, 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதேபோல புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, காடையாம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 49 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலத்தில் 24.3 மி.மீ., காடையாம்பட்டி 4, பெத்தநாயக்கன்பாளையம் 3, ஏற்காடு 2, ஆத்தூர் 1.4 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 83.3. மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×