என் மலர்

  செய்திகள்

  விபத்தில் சேதம் அடைந்த காரை படத்தில் காணலாம்.
  X
  விபத்தில் சேதம் அடைந்த காரை படத்தில் காணலாம்.

  திண்டிவனம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல் -10 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திண்டிவனம்:

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சங்கால் பட்டியை சேர்ந்த கண்ணதாசன், பால் பாண்டியன் குடும்பத்தினர் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி மாருதி காரில் 7 பேர் காஞ்சிபுரம் நோக்கி நேற்று இரவு புறப்பட்டனர். இந்த காரை டிரைவர் பாரதிராஜா ஓட்டி வந்தார்.

  இந்த கார் இன்று அதிகாலை திண்டிவனம் அருகே தீவனூர் கூட்டு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே இன்னொரு காரில் அத்திவரதரை தரிசித்து விட்டு சில பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி உருக்குலைந்தது.

  இந்த விபத்தில் சங்கால்பட்டியை சேர்ந்த கண்ணதாசன் மனைவி ஈஸ்வரி (வயது 45), கோட்டைச்சாமி மனைவி பாக்கிய லட்சுமி, பால்பாண்டியன் மனைவி மகாலட்சுமி, டிரைவர் பாரதிராஜா, கேஷ்மாஸ்ரீ, நிரஞ்சனா, சகாயவர்மன், ராம்மோகன் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இன்னொரு காரில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர்.

  காயம் அடைந்த 10 பேரும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 10 பேரும் மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இந்த விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×