search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    வீட்டுக்காவலில் வைத்துள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் - ஸ்டாலின்

    காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
     
    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் 
    வைக்கப்பட்டு உள்ளனர்.

    ஸ்டாலினின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ள அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக எவ்விதமான தண்டனை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×