என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருப்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  திருப்பூர்:

  திருப்பூர் -காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

  அவளை தினமும் அவரது தந்தை பள்ளியில் விட்டு வருவது வழக்கம். நேற்று விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்தாள். அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.

  இதனை பார்த்த பெற்றோர் அவளிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி வேலாயுதம் (52) என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தாள். கடந்த ஒரு வாரமாக தொந்தரவு செய்ததாக கூறினாள்.

  இதனால் அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

  Next Story
  ×