search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாசறை மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. எப்போதும் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்களை விதைத்து தற்காலிக வெற்றியை பெற்றுள்ளது. மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி தி.மு.க.வுக்கு நிரந்தரம் இல்லை. இனி வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க. மீண்டும் அமோக வெற்றி பெறும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதல் படி கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எத்தனை பொய்களை பரப்பினாலும் முதல்-அமைச்சராக முடியாது. அவரது நினைப்பு பகல் கனவாகவே முடியும்.

    விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே இளைஞர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்ட வேண்டும். இதற்காக மக்களை சந்தித்து மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண இளைஞர்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.எஸ்.பாண்டியன், சோலைராஜா, ஜெயரீகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×