என் மலர்

  செய்திகள்

  மதுரை விமான நிலையம்
  X
  மதுரை விமான நிலையம்

  சுதந்திர தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுதந்திர தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  அவனியாபுரம்:

  வருகிற 15-ந்தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

  அதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையம் முழுவதும் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தமிழக காவல் துறையுடன் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளையும் பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

  பார்வையாளர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×