search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்துக்கு செல்லும் மு.க.ஸ்டாலின்
    X
    கூட்டத்துக்கு செல்லும் மு.க.ஸ்டாலின்

    காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் - திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று மாலை நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. அத்துடன், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்தது. காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், காஷ்மீர் மாநிலம் விரைவில் பிரிக்கப்பட உள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அக்கட்சிகளின் சார்பில் கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவி பச்சமுத்து, திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×