என் மலர்

  செய்திகள்

  மேட்டூர் அணை
  X
  மேட்டூர் அணை

  நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - ஆட்சியர் ராமன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  சேலம்:

  சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
   
  கர்நாடகம், கேரளா மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபிணி மற்றும் அதன் துணை அணைகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு அதிகளவில் நீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் நீர்பிடிப்பு பகுதிகளில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  மேட்டூர் அணைப்பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்கவோ, செல்பி படங்கள் எடுப்பதையும் முற்றிலும் தடுத்திட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×