என் மலர்

  செய்திகள்

  தமிமுன் அன்சாரி
  X
  தமிமுன் அன்சாரி

  அத்தி வரதர் தரிசனத்துக்கு பரிந்துரை கடிதம் வழங்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அத்தி வரதர் தரிசனத்துக்கு பரிந்துரை கடிதம் வழங்கும் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ.வின் செயல் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
  சென்னை:

  நாகை தொகுதி எம்.எல் ஏ. தமிமுன் அன்சாரியிடம் அத்தொகுதியை சேர்ந்த இந்து பக்தர்கள் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று தமிமுன் அன்சாரி பாஸ் கிடைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார்.

  சிக்கல் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர்கள் தமிமுன் அன்சாரியை சாலையோர கடையில் வைத்து சந்தித்து இது பற்றி கேட்டனர். உடனே அவர் தனது லட்டர் பேடை எடுத்து பரிந்துரை கடிதங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பரிந்துரை கடிதத்தை பெற்ற மகிழ்ச்சியில் இளைஞர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

  தமிமுன் அன்சாரி எம்எல்ஏ.வின் மதங்களை கடந்த இந்த செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
  Next Story
  ×