என் மலர்

  செய்திகள்

  தீ விபத்து
  X
  தீ விபத்து

  ஆண்டிப்பட்டி அருகே பஞ்சு குடோனில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரு‌ஷநாடு கிராமத்தில் தனியார் பஞ்சாலை உள்ளது. இந்த ஆலைக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது.

  காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி பரவி எரிந்தது. இதில் இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி மூடைகள் பல எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இதுபற்றி ஆலை நிர்வாகம் சார்பாக வரு‌ஷநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .

  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடோனில் தீ பிடித்தது எப்படி? வேறு யாரும் தீ வைத்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

  Next Story
  ×