search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கடல் அணை
    X
    முக்கடல் அணை

    முக்கடல் அணை 1½ அடியை எட்டியது

    கடந்த ஒரு வாரமாக கொட்டித்தீர்த்து வரும் மழையின் காரணமாக முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடியில் இருந்து இன்று காலை அணையின் நீர்மட்டம் ஒரு அடியை எட்டியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து பைப்லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக போதுமான அளவு மழை இல்லாததால் முக்கடல் அணையின் நீர்மட்டம் சரிந்து காணப்பட்டது. மைனஸ் அடியாகவே அணையின் நீர்மட்டம் இருந்து வந்தது. இதனால் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கொட்டித்தீர்த்து வரும் மழையின் காரணமாக முக்கடல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. மைனஸ் அடியில் இருந்து இன்று காலை அணையின் நீர்மட்டம் ஒரு அடியை எட்டியது. மதியம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 1½ அடியை நெருங்கியது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 13.70 அடியாக இருந்தது. அணைக்கு 1702 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 48.65 அடியாக உள்ளது. அணைக்கு 1557 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 9.18 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 7.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 37.24 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-44.2, பெருஞ்சாணி-39.2, சிற்றாறு 1-66.6, சிற்றாறு 2-52, மாம்பழத்துறையாறு-42, இரணியல்-16.4, ஆனைக்கிடங்கு-49.2, குளச்சல்-18, குருந்தன்கோடு-31, அடையா மடை-48, கோழிப்போர் விளை-55, முள்ளங்கினா விளை-55, புத்தன் அணை-38, திற்பரப்பு-8.4, நாகர்கோவில்-35.2, பூதப்பாண்டி-17.4, சுருளோடு-38.6, கன்னி மார்-14.2, ஆரல்வாய்மொழி-10.4, பாலமோர்-31.6, மையிலாடி-38, கொட்டாரம்-40.

    Next Story
    ×