search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருப்பூரில் பலத்த மழை

    திருப்பூரில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெளுத்து வாங்கியபோதும் திருப்பூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருந்தது. துளிகூட மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து கனமழை விடியவிடி கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. கனமழையால் இன்று பள்ளிகளுக்கு கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி விடுமுறை அறிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் கடந்த 1 ஆண்டுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மங்கலம் அருகே உள்ள நல்லம்மான் தடுப்பணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்குள்ள கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

    ஆத்துப்பாலத்தில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    திருப்பூர் 44, அவினாசி 45, பல்லடம் 59, காங்கயம் 29.10, தாராபுரம் 40, மூலனூர் 27, அமராவதி அணைப்பகுதியில் 68, உடுமலை 70, திருமூர்த்தி 130 என மொத்தம் 512.10 மி.மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் அவினாசி ஒன்றிய பகுதிகளில் நேற்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. காலை 7 மணி முதல் 10 மணி வரை அவினாசி அதனை சுற்றியுள்ள கருவலூர், நம்பியாம் பாளையம், வெள்ளியம்பாளையம், சுண்டக்காம் பாளையம், புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம், துலுக்கமுத்தூர், ஆலம்பாளையம், பழங்கரை, அவிநாசிலிங்கம் பாளையம், ராயம்பாளையம், சின்னேரிபாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணியில் இருந்து இடைவிடாது மிதமான மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×