search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரியில் வெள்ளம்
    X
    நீலகிரியில் வெள்ளம்

    நீலகிரி கனமழையால் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி - முதல்வர் பழனிசாமி

    நீலகிரியில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 
    கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, நீலகிரி மாவட்டம், நடுவட்டம் இந்திரா நகரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அமுதா (34), அவரது மகள் காவ்யா (10) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

    இந்நிலையில், நீலகிரியில் கனமழை காரணமாக உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.

    மீட்புப் பணியில் 66 ராணுவ வீரர்கள் உள்பட 491 பேர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 1704 பேர், 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    Next Story
    ×