என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  நூதன கொள்ளை - வடமாநில வாலிபர் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் உதவுவதுபோல் நடித்து நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  திருவொற்றியூர்:

  திருவொற்றியூர் போலீசார் நேற்று இரவு எல்லையம்மன் கோவில் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அங்கிருந்த ஒரு ஏ.டி.எம். மைய வாசலில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

  அவர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டபோது ரூ. 15 ஆயிரம் பணம் இருந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

  விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துர்கேஷ் பண்டிட், பிரமோத் என்பதும் அத்திப்பட்டு புதுநகரில் தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.

  ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பது போல் நின்று அங்கு வருபவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

  இருவரும் கொடுங்கையூர் எம்.கே.பி. நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர் பணத்தை டெபாசிட் செய்ய வந்தபோது அவரிடம் இருந்து ரூ. 15 ஆயிரத்தை திருடி வந்ததை ஒப்புக் கொண்டனர்.

  இதையடுத்து துர்கேஷ் பண்டிட், பிரமோத் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 15 ஆயிரம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×