என் மலர்

  செய்திகள்

  கருணாநிதியின் புகழ் பரப்பும் புதிய இணையதளத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
  X
  கருணாநிதியின் புகழ் பரப்பும் புதிய இணையதளத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

  கருணாநிதி புகழ் பரப்பும் புதிய இணையதளம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கருணாநிதி புகழ் பரப்பும் புதிய இணையதளத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  சென்னை :

  கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் கருணாநிதியின் புகழ் பரப்பும் புதிய இணையதளம் ( www.kalaignar.dmk.in ) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கருணாநிதியின் சாதனைகள், படைப்புகள், உரைகள், மேடைப் பேச்சுகள், புகைப்படங்கள், காணொளிகள் இடம் பெற்றுள்ளது. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

  இந்த நிகழ்வின்போது, முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் ஆவுடையப்பன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  Next Story
  ×