search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் வன்முறை குறித்த விழப்புணர்வு ஊர்வலம்
    X
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் வன்முறை குறித்த விழப்புணர்வு ஊர்வலம்

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

    பர்கூரில் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் வன்முறை குறித்த விழப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    பர்கூர்:

    பர்கூரில் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் வன்முறை குறித்த விழப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பர்கூர் பஸ் நிலையம் அருகிலிருந்து இந்த ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஜெகதேவி ரோடு, சின்னபர்கூர், மெயின் ரோடு, வாணியம்பாடி ரோடு வழியாக தாசில்தார் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தவாறும் மாணவ, மாணவிகள் சென்றனர். இதில், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கற்பகம், பர்கூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அமுதா, ரவிச்சந்திரன், அமரன் மற்றும் பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×