என் மலர்

  செய்திகள்

  நகைகள் கொள்ளை
  X
  நகைகள் கொள்ளை

  மதுரையில் டாக்டர் வீட்டில் புகுந்து 31 பவுன் நகை-பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் டாக்டர் வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை தபால்தந்தி நகர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மேரி சுவர்ண லட்சுமி. இவரது கணவர் டாக்டர் பென் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

  இதனால் மேரி சுவர்ணலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் உறவினர்களை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 31 பவுன் நகை, வைர நெக்லஸ், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர்.

  ஊர் திரும்பிய மேரி சுவர்ணலட்சுமி பீரோவில் நகை-பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இது குறித்து புகாரின் பேரில் கூடல்புதூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகை-பணம் கொள்ளை போனது தொடர்பாக சிலர் மீது சந்தேகம் இருப்பதாக மேரி சுவர்ணலட்சுமி தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

  Next Story
  ×