search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதியதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலை
    X
    புதியதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலை

    முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை- மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று திறந்து வைத்தார்.
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில்  இன்று மாலை கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கி வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

    புதியதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலை

    6.5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் எழுதுவது போன்று உருவாக்கப்பட்ட சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து  வைத்தார்.

    புதிதாக திறக்கப்பட்ட சிலையின் பீடத்தில் கருணாநிதியின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×