search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலில் விழுந்த மரங்கள்
    X
    கஜா புயலில் விழுந்த மரங்கள்

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் விழுந்த மரங்கள் ஏலம்

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் விழுந்த மரங்கள் வருகிற 20-ந்தேதி பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் ஏலமிடப்படுகிறது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மரங்கள் வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் ஏலமிடப்படுகிறது. ஏலம் அரசு விதிமுறைகளின்படி நடைபெறுகிறது.

    ஏலத்தில் கலந்துகொண்டு ஏலதாரர்கள் முன்வைப்புத்தொகையான ரூ.25000-த்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக துணை இயக்குனர் பெயரில் எடுத்துவருகிற 19-ந்தேதிக்குள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் வழங்க வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் முழுத்தொகையையும் உடனே செலுத்த வேண்டும். குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×