என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இளம்பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய 2 வாலிபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இளம்பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவரது மனைவி கீர்த்தனா (வயது 20). இவர்களுக்கு கடந்த 1 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் பாண்டிதுரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வி‌ஷ வாயு தாக்கி இருந்தார். இதன் காரணமாக கீர்த்தனா சூலூர் பீடம்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த அவரிடம் உப்பிலிபாளையம் காந்தி நகரை சேர்ந் அலிபாபா (32) என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால் அவர்தொடர்ந்து மறுத்து வந்தார்.

    சம்பவத்தன்று அலிபாபா, தனது நண்பரான சுரேஷ் (24) என்பவருடன் கீர்த்தனா வீட்டுக்கு சென்றார். பின்னர் கீர்த்தனாவிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். தொடர்ந்து அவர் மறுக்கவே அலிபாபா நண்பருடன் சேர்ந்து கீர்த்தனாவை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    பின்னர் இது குறித்து கீர்த்தனா சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அலிபாபா, சுரேஷ் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×