என் மலர்

  செய்திகள்

  போலீசார் விசாரணை
  X
  போலீசார் விசாரணை

  அத்திவரதரை தரிசிக்க சென்ற சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாப்பிரெட்டிப்பட்டி அருகே அத்திவரதரை தரிசிக்க சென்ற சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மெனசி அருகே உள்ள மருக்காலம்பட்டியை சேர்ந்தவர் சம்பத். இவர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

  இவர் குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்றார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டிற்குள் எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை.

  இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×