search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் ஷேக் அப்துல்லா தங்கியிருந்த கோகினூர் மாளிகை.
    X
    கொடைக்கானலில் ஷேக் அப்துல்லா தங்கியிருந்த கோகினூர் மாளிகை.

    காஷ்மீர் பிரச்சினை - கொடைக்கானல் ஷேக் அப்துல்லா மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு

    காஷ்மீர் பிரச்சினையை முன்னிட்டு கொடைக்கானலில் முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லா தங்கி இருந்த மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி ஷேக் அப்துல்லா காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த 14.7.1965 முதல் 15.6.1967 வரை கொடைக்கானலில் உள்ள கோகினூர் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.

    அவரது நினைவாக 1984-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த மாளிகைக்கு ஷேக் அப்துல்லா மாளிகை என பெயரிட்டார். இந்நிகழ்ச்சியில் அவரது மகன் பரூக் அப்துல்லாவும் கலந்து கொண்டார்.

    ஜம்மு காஷ்மீர் மாநில மறு சீரமைப்புக்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

    அதில் பேசியவர் ஷேக் அப்துல்லா மாளிகைக்கு சிவா என்று பெயர் வைக்குமாறும் இல்லையெனில் விபரீதம் ஏற்படும் எனவும் கூறி இணைப்பை துண்டித்தார். இதனையடுத்து ஷேக் அப்துல்லா மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    உயர் அதிகாரிகளிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை கோகினூர் ஷேக் அப்துல்லா மாளிகைக்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×