என் மலர்

  செய்திகள்

  வழக்கு
  X
  வழக்கு

  மதகடிப்பட்டில் கோவில் மரங்களை வெட்டி கடத்தல் 3 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதகடிப்பட்டில் கோவில் வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  திருபுவனை:

  திருபுவனை அருகே மதகடிப்பட்டில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறத்தில் கோவிலுக்கு சொந்தமான தேக்கு, கொடுக்காபுளி, அசோகா மரம் மற்றும் தென்னை மரங்கள் உள்ளன.

  இந்த நிலையில் அங்கிருந்த சில மரங்களை யாரோ சிலர் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.

  இதுகுறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரி குமாரவேலு இது பற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா விசாரணை நடத்தினார்.

  விசாரணையில் மரங்களை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், சரவணன், மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேர் வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×