search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    சாயல்குடியில் குடிநீர் கேட்டு கடையடைப்பு- பொதுமக்கள் தர்ணா போராட்டம் நாளை நடக்கிறது

    சாயல்குடியில் குடிநீர் வழங்கக்கோரி நாளை கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை நரிப்பையூர், கன்னிராஜபுரம் ஐந்து ஏக்கர் ஆகிய பகுதிகளிலிருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டுவரும் குடிநீரை ரூபாய் ஐந்துக்கு வாங்கி அன்றாட உபயோகத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த பகுதியில் தோண்டப்படும் தண்ணீர் கிணறுகளில் உவர் நீராக உள்ளது ஆகையால் கன்னிராஜபுரம் பகுதியில் மட்டுமே குடிநீர் கிடைக்கப்பட்டு வந்தது.

    கடந்த 35 ஆண்டுகளாக சாயல்குடி பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில்கூட இந்தப்பகுதியில் இருந்து சாயல்குடிக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்தது ஆனால் கன்னி ராஜபுரத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அதன் உரிமையாளர்கள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

    அதனால் கடந்த ஒருவாரகாலமாக சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் குடிநீர் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது அரசு அலுவலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் எந்தவித முயற்சியும் எடுக்காத நிலையில் உள்ளனர்.

    சாயல்குடி பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி நாளை மும்முனை சந்திப்பில் வர்த்தக சங்கம் மற்றும் ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்கள் இணைந்து தொடர் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×