search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது

    தஞ்சை அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நள்ளிரவு வல்லத்தை அடுத்துள்ள வண்ணாரப்பேட்டை பாலம் அருகே ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது போலீசார் வண்ணாரப்பேட்டையில் இருந்து பிள்ளையார்பட்டி செல்லும் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது அருகில் இருந்த முட்புதரில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அந்த வழியாக வருபவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட காத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த அரிவாள், கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களையும் போலீசார் கைபற்றி 4 பேரையும் வல்லம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் திருச்சி கொட்டப்பட்டு ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன்கள் சின்ராசு (வயது 20), ரமேஷ் (22). தஞ்சை வல்லம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரவி (32). லோடு வேன் டிரைவர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை சேர்ந்த பாலமணிகண்டன் (27) ஆகியோர் என தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரும் தஞ்சை மாவட்டம் வல்லம் வந்துள்ளனர். பின்பு வல்லம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ரவியின் வீட்டில் மது அருந்திவிட்டு சாலையில் தனியாக வரும் வாகன ஓட்டிகளை மறித்து வழிப்பறியில் ஈடுபடுவதற்காக முட்புதரில் மறைந்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேர் மீதும் ஏற்கனவே திருச்சியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×