என் மலர்

  செய்திகள்

  வரதட்சணை கொடுமை
  X
  வரதட்சணை கொடுமை

  போடி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போடி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

  தேனி:

  போடி அருகில் உள்ள வினோபாஜிகாலனி 2-வது வார்டை சேர்ந்த மோதிலால் மனைவி மகாலட்சுமி(வயது23). இவரும் பெரியகுளம் அருகில் உள்ள சில்வார்பட்டியை சேர்ந்த பரமசிவம் மகன் மோதிலால்(24) என்பவரும் காதலித்து கடந்த 23.7.2018-ந்தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

  திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் ரூ.2லட்சம் பணம் வாங்கிவரச்சொல்லி மகாலட்சுமியை அடித்து சித்ரவதை செய்ததால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

  இந்நிலையில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த வைரவன் மனைவி எழிலரசியுடன் அவர் பழகி வந்துள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி கேட்டபோது அவரது ஜாதியை சொல்லி அவதூறாக பேசினர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நித்யா புகார் அளித்தார். அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

  வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மோதிலால், மாமனார் பரமசிவம், மாமியார் ஜெயலட்சுமி, எழிலரசி, நித்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர்.

  Next Story
  ×