search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
    X
    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்

    பெரம்பலூரில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் குழந்தைகளை தவறான முறையில் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூரில் பாலக்கரையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி, கோல்டன் கேட்ஸ் ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் குழந்தை தொழிலாளரை ஒழிப்போம், குழந்தை திருமணத்தை தடுப்போம். குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து தடுப்போம். குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமான கல்வி அறிவை புகட்டுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷமிட்டபடியும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊர்வலம் வெங்கடேசபுரம் வழியாக சென்று ரோவர் ஆர்ச்சில் முடிவடைந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரன் (பெரம்பலூர் சரக), ஆறுமுகம் (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு) போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், வணிகர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×