என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  சேலத்தை சேர்ந்த 2 பெண்கள் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தை சேர்ந்த 2 பெண்கள் விபத்தில் பலியான சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தர்மபுரி:

  சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த சுந்தரம் மனைவி லட்சுமி (வயது 47). சேலம் வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் சுசீலா (80).

  இவர்கள் 2 பேரும் தர்மபுரி மாவட்டம் ஜருகு மலையை அடுத்த அஜ்ஜிப்பட்டி கிராமத்தில் துக்கம் விசாரிக்க வந்தனர். நேற்று நள்ளிரவு சேலம் செல்வதற்காக தொப்பூரை அடுத்த வெள்ளக்கல் பகுதியில் பஸ் ஏறுவதற்காக சாலையை கடந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் 2 பேர் மீது மோதியது.

  இதில் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் லட்சுமி இறந்து போனார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுசீலா அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

  இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×