search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஹெல்மெட் சோதனையில் வாக்குவாதம் - சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றதாக ரெயில்வே அதிகாரி கைது

    ஹெல்மெட் சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றதாக ரெயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டார்.
    மதுரை:

    மதுரை நகரில் ஆங்காங்கே நாள்தோறும் போலீசார் தீவிர ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாததால் வாகன நெரிசலில் நிற்கும் வாகன ஓட்டிகளை கிரிமினல் போல் நடத்தும் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

    மதுரை திடீர்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ் தலைமையிலான போலீசார் வாகன நெரிசல் மிக்க டவுன்ஹால் ரோடு சந்திப்பில் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தத்தனேரி சுந்தரராஜநகரைச் சேர்ந்த குருசாமி (வயது50) என்பவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவரை மறித்த போலீசார் அபராதம் செலுத்துமாறு கூறினர். இதனால் குருசாமிக்கும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தன்னை தாக்க முயன்றதாக குருசாமி மீது சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ் திடீர்நகர் போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக குருசாமியை கைது செய்தனர்.

    கைதான குருசாமி மதுரை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×