search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்
    X
    மான்

    மான் மீது காரை ஏற்றிய டிரைவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

    பந்தலூர் அருகே மான் மீது காரை ஏற்றிய டிரைவர் பிதர்காடு மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முக்கட்டி-பாட்டவயல் சாலையில், ‘கிம்சன் கேட்’ என்ற இடத்தில், புலிகள் காப்பகம் உள்ளது.

    அங்கிருந்து காட்ஸ்புரூக் வனத்திற்கு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்வதற்காக வழித்தடம் உள்ளது. இதன் வழியாக தினமும் விலங்குகள் நடந்து செல்கின்றன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை இந்த சாலையை மான்கள் கூட்டம் கூட்டமாக கடந்து சென்றன. அப்போது நெலாவில் இருந்து பாட்ட வயலுக்கு வந்த கார் ஒரு புள்ளி மான் மீது மோதியது. இதில் மான் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பிதர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். கால்நடை டாக்டர் நந்தினி வரவழைக்கப்பட்டு மான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மான் மீது கார் ஏற்றியது சவுகத்(வயது 35) என்பது தெரிந்தது.

    இதையடுத்து கூடலூர் வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவுபடி, பிதர்காடு வனத்துறையினர் கார் டிரைவர் மீது, வழக்கு பதிவு செய்து, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×