என் மலர்

  செய்திகள்

  தக்காளி
  X
  தக்காளி

  விலை குறைந்ததால் அறுவடை செய்யாமல் செடிகளில் வீணாகும் தக்காளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்காளி அறுவடை செய்ய கொடுக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாகாது என்ற நிலையில் தக்காளி விவசாயிகள் அறுவடை செய்யாமல் செடிகளிலே விட்டுவிட்டனர்.
  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம், பழனி கவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், புத்தரச்சல், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தக்காளி விவசாயம் நடைபெற்று வருகிறது.

  தக்காளி பயிரிட்ட 90-வது நாள் முதல் தக்காளி பழங்கள் அறுவடை செய்யலாம். 45 நாள் முதல் 60 நாள் வரை நாள்தோறும் தக்காளி பழங்கள் அறுவடைக்கு கிடைக்கும்.

  ஒரு ஏக்கர் தக்காளி பயிரிட விதை, உரம், நடவு, கூலி மற்றும் பராமரிப்பு போன்றவற்றிக்கு சுமார் ரூ.40 ஆயிரம் செலவாகிறது. சென்ற வாரத்தில் ஒருகிலோ ரூபாய் 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் தக்காளி வரத்து அதிகமாகி விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

  இதனால் ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் செடிகளில் இருந்து தக்காளி அறுவடை செய்ய கொடுக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாகாது என்ற நிலையில் தக்காளி விவசாயிகள் அறுவடை செய்யாமல் செடிகளிலே விட்டுவிட்டனர். இதனால் விளைந்த தக்காளி பழங்கள் செடிகளிலே வீணாகி வருகின்றன.

  Next Story
  ×