search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகையிலை
    X
    புகையிலை

    தக்கலையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

    தக்கலையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 15 பாக்கெட்டு புகையிலைகளை பறிமுதல் செய்தனர்.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து தடை செய்யப்பட்டுள்ள புகையிலை விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று தக்கலை பஜார் பகுதியில் ரோந்து வந்தனர். பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கடைகளில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 15 பாக்கெட்டு புகையிலைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக பழனி (43), தாமோதரன் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையம், பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, சிகரெட் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×