search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    புதுவை கடற்கரை திட்டங்கள் - கவர்னர் கிரண்பேடி ஆய்வு

    புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதிநாளான இன்று திப்புராயப்பேட்டை, அரிக்கன்மேடு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    மத்திய அரசின் சுதேசி பாரத் தர்‌ஷன் திட்டத்தின் கீழ் புதுவையில் ரூ.70 கோடியில் காலாப்பட்டு, திப்புராயப்பேட்டை, அரிக்கன்மேடு, சின்ன வீராம்பட்டினம், சுண்ணாம் பாறு, மணப்பட்டு, நரம்பை ஆகிய 7 கடற்கரை பகுதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

    இதையடுத்து புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதிநாளான இன்று திப்புராயப்பேட்டை, அரிக்கன்மேடு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    திட்டம் மேற்கொள்ளப்படும் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும். சூரிய ஒளிமின்சார விளக்குகள் அமைக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு அமைப்பு அமைக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் செயலர் சுந்தரேசன், அதிகாரிகள் பாஸ்கர், வல்லவன், ராமன், ஆறுமுகம், பாஸ்கரன், ஆறுமுகம், ஆஷாகுப்தா ஆகியோர் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத்திற்கே சவாலான ஒன்றாக பிளாஸ்டிக் மாறியுள்ளது. காலதாமதமின்றி பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய்தது சிறந்த காரியம். புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    அதைப்பற்றி முழுமையாக அறியாமல் கருத்து தெரிவிக்க முடியாது. சிறுவயதிலேயே மேம்படுத்தும் திறன், சிறந்த பண்புகளை வளர்க்கும் நலன்கள் கல்வியில் வேண்டும். இது மிகவும் அவசியமானது என தெரிவித்தார்.

    Next Story
    ×