search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருங்கைக்காய்கள்
    X
    முருங்கைக்காய்கள்

    வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி- வெளி மாநிலங்களுக்கு செல்லும் முருங்கைக்காய்கள்

    அய்யலூர் அருகே கல்பட்டிசத்திரம் சந்தையில் இருந்து அதிக அளவில் முருங்கைக்காய் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, கோவிலூர், வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நாட்டு முருங்கை மற்றும் செடி முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மற்றும் கல்பட்டி சத்திரம் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    அதிக அளவு கல்பட்டி சத்திரம் சந்தைக்கே வருகிறது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக முருங்கை விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாதம் என்பதால் திண்டுக்கல் மற்றும் கோவில் திருவிழாக்களுக்காக முருங்கை அதிக அளவு வாங்கிச் செல்லப்பட்டது.

    தற்போது முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கிலோ ரூ.22 ஆக சரிந்துள்ளது. எனவே உள்ளூர் தேவைக்கு போக அதிக அளவு முருங்கைக்காய்கள் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இருந்தபோதும் வெளியூர் தேவைக்காக அதிக அளவில் அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×