என் மலர்

  செய்திகள்

  தமிழிசை
  X
  தமிழிசை

  தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் பா.ஜ.க. பின்வாங்காது- தமிழிசை பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் பா.ஜ.க. எப்போதும் பின் வாங்காது என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

  திருச்சி:

  திருச்சி விமான நிலையத்தில் இன்று பாஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது :-

  தமிழகத்தில் அனைத்து வார்டுகளிலும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய சக்தியாக பா.ஜ.க. உருவெடுக்கும் வகையில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ந்து வருவது புதிய உற்சாகத்தை அளித்து வருகிறது.

  தமிழகம் ஒரு நேர்மறை அரசியலுக்கு வரவேண்டும். வேலூரில் தற்போது தேர்தல் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. மற்ற தேர்தல்களோடு வேலூர் தேர்தலை நடத்தாமல் வேலூருக்கு மட்டும் தனித் தேர்தல் நடத்தப்படுவதற்கு காரணம் தி.மு.க.தான். அங்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் இந்தியாவிலேயே இடையில் வந்திருக்கின்ற ஒரே தேர்தல் வேலூர் தேர்தல் மட்டும்தான்.

  பா.ஜ.க. மீது மக்களுக்கு கோபமில்லை. மக்கள் முழுவதுமாக மத்திய அரசிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கூட நாட்டிற்கு உகந்த கட்சி பா.ஜ.க. தான் என தெரிவித்து அவர்களே பா.ஜ.க.வை நோக்கி வரும் போது மக்கள் எப்படி பா.ஜ.க.விற்கு எதிராக இருப்பார்கள்.

  பா.ஜ.க.வில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதால் வேலூர் தேர்தலில் பங்கு பெற இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவதற்கு காரணம் விபத்தில் உயிரிழப்பை தடுப்பதற்கும், சாமானிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.

  நீட்

  கர்நாடகாவில் புதியதாக பதவியேற்று இருக்கும் பா.ஜ.க.அரசிடம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட கோரிக்கை விடுக்கப்படும். தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் பா.ஜ.க. எப்போதும் பின் வாங்காது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலூர் பாராளுமன்ற தேர்தல் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். 

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×