என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்1 Aug 2019 1:41 PM GMT (Updated: 1 Aug 2019 1:41 PM GMT)
கரூர் மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என் புகழுர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். சில வியாபாரிகள் வாழைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றனர். வாழைத்தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
ஆடி அமாவாசையொட்டி வாழைத்தார்கள் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு பூவன் வாழைத்தார் ரூ.500-க்கு விற்றது. தற்போது ரூ.750-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது தற்போது ரூ.500-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கு விற்றது தற்போது ரூ.450-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது தற்போது ரூ.500-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.600-க்கு விற்றது தற்போது ரூ.800-க்கும் விற்பனையானது.
இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×