search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி

    சூலூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூலூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சதாசிவம் ( 38). இவர் சூலூர் அருகே உள்ள மேற்கு அரசூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும் அஜய் (11) என்ற மகனும் உள்ளனர்.

    இவரது வீட்டின் அருகில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா(24) என்ற மனைவியும் மகிமா (3 ) என்ற பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் சதாசிவத்திற்கும் சத்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் எதிப்பு தெரிவித்து இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி பிரிய மனமில்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து சதாசிவம் தனது இருசக்கர வாகனத்தில் சத்யாவை அரசூரில் இருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் உள்ள காட்டுபகுதிக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் இருவரும் தாங்கள் கொண்டு சென்ற சாணி பவுடரை குளிர்பானத்தில் கலந்து குடித்தனர். அதன் பின்னர் மயங்கி விழுந்தனர். அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் கள்ளக்காதல் ஜோடி மயங்கி கிடப்பதை பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×