என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  அய்யம்பேட்டையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அய்யம்பேட்டையில் திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  அய்யம்பேட்டை:

  வலங்கைமான் தாலுக்கா ஆவூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகையன் மகன் நவமணி (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

  இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நவமணிக்கும் திருமணம் நடந்தது. இதன் பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் நவமணி மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

  எனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆறுதலுக்காக அய்யம்பேட்டை மேலப்பேட்டை தெருவில் உள்ள தனது தாத்தா சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்துள்ளார்.

  இந்நிலையில் தனது தாத்தா வீட்டில் இருந்த நவமணி திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயங்களுடன் போராடிய நவமணியை உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

  Next Story
  ×