search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மாணவிகளை முதுநிலை மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்
    X
    மாணவிகளை முதுநிலை மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்

    எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடங்கியது - புதிய மாணவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு

    சென்னை மருத்துவ கல்லூரி (எம்.எம்.சி.) இடம் கிடைத்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று வகுப்புக்கு சென்றார்கள். அவர்களை முதுநிலை மாணவர்கள் ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
    சென்னை:

    நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. சுமார் 5 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது.

    தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட்டன.

    இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி இன்று (ஆகஸ்டு 1) முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன.

    சென்னை மருத்துவ கல்லூரி (எம்.எம்.சி.) இடம் கிடைத்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று வகுப்புக்கு சென்றார்கள். அவர்களை முதுநிலை மாணவர்கள் ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

    கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் நிர்வாக அலுவலர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் புதிய மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    புதிய மாணவர்களை யாரும் ராக்கிங் செய்யக்கூடாது என்றும் அதை மீறும் மாணவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    புதிய மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்று வகுப்புகளில் அமர வைத்தனர். அதே போல ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்றனர்.
    Next Story
    ×