என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் - உற்பத்தியாளர்கள் கோரிக்கை
Byமாலை மலர்1 Aug 2019 9:02 AM IST (Updated: 1 Aug 2019 9:02 AM IST)
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னை:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தற்போதைய சூழ்நிலையின்படி ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ரூ.49.84 செலவாகிறது. பால் உற்பத்தி செலவின் அடிப்படையில் பால் கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
அதன்படி, பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 50 ரூபாயாகவும் அரசு நிர்ணயிக்க வேண்டும். அதற்கு இணையாக பால் விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும். இதன்மூலம் 40 லட்சம் பால் உற்பத்தியாளர்களின் குடும்பம் பிழைக்கும்.
குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் முட்டைகள் வழங்குவதுபோல, பாலையும் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் பெறும் பாலுக்கு லிட்டர் அடிப்படையில் ஊக்க விலை அரசு நிதியில் இருந்து வழங்க வேண்டும்.
பாலில் கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பு அல்லாத இதர சத்து தரம் அறிவதில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை அமல்படுத்த வேண்டும். அனைத்து பால் உற்பத்திக் கறவைகளையும் காப்பீடு செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முதல்- அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×