search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் விடுதலை
    X
    மீனவர்கள் விடுதலை

    இலங்கை சிறையில் இருந்த ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

    இலங்கை சிறையில் இருந்த ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளையில் இருந்து கடந்த 12-ந்தேதி பாலவன்னியன் என்பவருக்கு சொந்தமான ஒரு நாட்டுப் படகில் சங்கர், கவியரசன், ராஜி, நாகூர், செட்டி உள்பட 6 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் அந்த 6 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன், இந்த 6 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அத்துடன் படகின் உரிமையாளர் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஊர்க்காவல்துறை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இந்த தகவலை பாம்பன் நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் ஊர்திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    Next Story
    ×