என் மலர்

  செய்திகள்

  வழக்கு
  X
  வழக்கு

  தேனி அருகே முன் விரோதத்தில் கோஷ்டி மோதல் - 13 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  தேனி:

  தேனி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகைபாண்டியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

  சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக ராஜதானி போலீசில் புகார் செய்தனர். தங்கவேல் மனைவி பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் கார்த்திகை பாண்டி, புகழேந்தி, சின்னான் உள்பட 6 பேர் மீதும், கார்த்திகை பாண்டி கொடுத்த புகாரின் பேரில் முருகன், பாலமுருகன், தங்கவேல் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  Next Story
  ×