என் மலர்

  செய்திகள்

  போராட்டம்
  X
  போராட்டம்

  திண்டுக்கல் கலெக்டர் ஆபிஸ் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் ஆபிஸ் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திண்டுக்கல்:

  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெஸ்டர்ன் கழிப்பறை, லிப்ட் வசதி, சர்க்கரநாற்காலி வசதி செய்து தரவேண்டும். மாற்றுததிறனாளிகளுக்கு நிபந்தனையின்றி வங்கிக்கடன் வழங்கவேண்டும். அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சாய்வு தள வசதி, வாகன பார்க்கிங் வசதி செய்து தரவேண்டும். திண்டுக்கல் பஸ்நிலையம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

  மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் மாவட்ட செயலாளர் பகத்சிங் முன்னிலையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஊனமுற்றோர் நல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத்திருவதாக அவர் தெரிவித்த நிபந்தனையை ஏற்காமல் உடனடியாக தங்களது கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  Next Story
  ×