search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தனியார் நிறுவன ஊழியருக்கு கத்தி குத்து - 2 வாலிபர்கள் கைது

    சரவணம்பட்டி அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை கணபதிசங்கனூர் ரோட்டை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் விஜயகுமார் (வயது 21). தனியார் நிறுவன ஊழியர்.

    நேற்று இவர் தனது சகோதரன் கார்த்திகேயன் என்பவருடன் மொபட்டில் பொன்னையார் வீதி வழியாக சென்றார். பொதுக்கழிப்பிடம் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் விஜயகுமாரின் மொபட்டை தடுத்து நிறுத்தனர்.

    பின்னர் மது குடிக்க பணம் கொடுக்கும் படி கத்தியை காட்டி மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் கத்தியால் விஜயகுமாரின் இடது பக்க கழுத்தில் குத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று ஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் கொடுத்த தகவலின் படி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாக இருந்த கஸ்தூரி பாய் வீதியை சேர்ந்த கரண்குமார் (25).

    இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. கணபதியை சேர்ந்த விஜயகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×