search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    மதுரையில் லேப்-டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

    மதுரையில் லேப்-டாப் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    மதுரை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் பயனடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. லேப்-டாப் வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது.

    மதுரை மாவட்டத்திலும் பல்வேறு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.

    தொடர் போராட்டம் விளைவாக விடுபட்டவர்களுக்கு விரைவில் லேப்-டாப் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அமெரிக்கன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் லேப்-டாப் வழங்கப்படவில்லை.

    இதை கண்டித்தும் லேப்- டாப் வழங்கக்கோரியும் இன்று 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
    Next Story
    ×